For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகெலும்பின் 'அ முதல் ஃ' வரை ஒரு சிலிர்ப்பு...!

By Sutha
|

ரொம்பப் பேருக்கு இந்தப் 'பிரச்சினை' இருக்கும். கிட்டத்தட்ட அந்தந்த வயதில் வரும் 'நோய்' என்று கூட சொல்லலாம். சிலர் இந்த நோயிலிருந்து 'நைஸாக' தப்பி விடுவார்கள். பலருக்கு இந்த நோய் முற்றி 'நொடித்து'ப் போகும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். பலர் இந்த நோய் தாக்கி, அதனால் பாதிக்கப்பட்டாலும் கூட படு ஊக்கத்துடன், நல்ல 'நலத்துடன்' இருக்கும் விசித்திரமும் உண்டு ... அதுதான் காதல்!

காதல் ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அது காதலை அணுகும் விதத்தில் இருக்கிறது. அத விடுங்க, மேட்டருக்கு வருவோம்... காதல் வந்தால் என்னவெல்லாம் வரும்.. இதைப் போய் எப்படிப்பா வெளில சொல்றது என்று கேட்பது காதுக்குப் புரிகிறது. ஆனால் காதல் வந்தவர்கள் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்று ஒரு சுவாரஸ்யமான ரவுண்ட் அப்.

Love
நிறையப் பேர் கவிதை எழுத இறங்கி விடுகிறார்களாம். அதென்னவோ தெரியலே, என்ன மாயமோ புரியலே, காதல் என்றாலே முதலில் கவிதையில்தான் இறங்குகிறார்கள் அத்தனை பேரும். உங்க வீட்டுக் கவிதை, எங்க வீட்டுக் கவிதை கிடையாது... வானமே, வையகமே, வைடூரியமே என்று ஆரம்பித்து எங்கெங்கோ போகுமாம் இதுபோன்ற கவிதைகள்.

இந்தக் கவிதையைப் படிங்களேன்

உனக்கும் எனக்கும் ஒரு இடம்

இணை பிரியாமல் இருக்க ஒரு இடம்

தனிமை நம்மைப் பிரிக்கிறது

ஆனால் உன் நினைவு வெளிச்சம் இருட்டை நீக்குகிறது..

உன் அன்பான நினைவு

அழகான புன்சிரிப்பு

இதை மீறியா இருள் வந்து விடும்?.

அலை அலையாக பரவிக் கிடக்கும் நமது அன்பு

இதயம் அப்படியே நின்று விட்டதடி பெண்ணே

நீ வந்து அமைதிப்படுத்து

காலம் கடந்தும் நிற்கும் நம் காதல்

சந்தேகமில்லை என் மனதுக்கு

அந்த நினைவிலேயே தொடர்ந்து துடிக்கும் என் இதயம்..

இது ஒரு கவிஞன் எழுதி வைத்த காதல் கவிதை

இன்னொரு காதல் கவிஞர் எழுதிய கவிதையைப் பாருங்கள்..

நீ என்னைப் பார்த்த பார்வையை ரசிக்கிறேன்

என்ன ஒரு பிரகாசம் உன் கண்களில்..

நீ என்னை சந்தோஷப்படுத்தும் விதத்தை ரசிக்கிறேன்

என்ன ஒரு பாசம் அதில்

காதலிக்கிறேன் என்று நீ சொன்னதை ரசிக்கிறேன்

என்ன ஒரு அக்கறை அதில்

நீ என்னைத் தொட்டபோது

என் முதுகெலும்பின் 'அ முதல் ஃ' வரை ஒரு சிலிர்ப்பு

நிச்சயம் நானும் காதலிப்பேன்

உன்னைப் போலவே ... உன்னை!

இதெப்படி இருக்கு...!

இதெல்லாம் ஆழ்ந்து ரசித்து காதலிக்கும் காதலர்களின் இதயத்திலிருந்து கொட்டும் கவிதைகள். இன்னும் பலர் டெய்லி ஒரு மெசேஜ் அனுப்பி தங்களது மனதை உரியவர்களுக்குப் புரிய வைக்கிறார்களாம். காலையில் ஒரு மெசேஜ், மத்தியானம் ஒரு வாட்டி, சாயந்திரம் ஒருவாட்டி, ராத்திரி தூங்கப் போவதற்கு முன்பு ஒருவாட்டி என விரட்டி விரட்டி காதலைச் சொல்கிறார்கள் பலர்.

காதலிக்கும் பெரும்பாலானவர்கள் செய்யும் ஒரு முக்கிய காரியம்... எப்போதும் காதலன் அல்லது காதலியின் நினைவிலேயே மூழ்கியிருப்பதுதானாம். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூட கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் எப்போதும் காதலன்/காதலியின் நினைவிலேயே இருப்பதாக கூறியுள்ளனராம். மீதமுள்ள 2 சதவீதம் பேரும் கூட பிற காரியங்களிலும் நான் கவனம் செலுத்துவேன். இருந்தாலும் அதையும் மீறி காதல் மனதுக்குள் அவ்வப்போது 'ஸ்லைட் ஷோ' போல வந்து போகும் என்று சொல்லியுள்ளனர்.

வானத்தில் உள்ள நட்சத்திரத்தைப் பார்த்தேன்.

உன்னை விட கொஞ்சம் ஜொலிப்பு குறைச்சல்தான்

என்னை விட உன்னைதான் அதிகம் நேசிக்கிறேன்

இருந்தாலும் இன்னும் கூடுதலாக ரசிக்க முயற்சிக்கிறேன்

தேவதையே...மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கிறது

கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொள்ளேன்... இதயத்தின் இன்னொரு பக்கம்!

இதுவும் ஒரு காதல் கவிதைதான்...

உங்க காதல் எப்படி...??

English summary

When you are falling in Love | முதுகெலும்பின் 'அ முதல் ஃ' வரை ஒரு சிலிர்ப்பு...!

Love makes a man or woman perfect and beautiful. Love makes everybody as poets and good writers and speakers. Here is a round up on Love and Lovers.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more