Latest Updates
-
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க
தோழியா, காதலியா, யாரடி நீ கண்ணே?
கண்டதும் காதல் சிலருக்குதான் ஏற்படும். சிலரிடையே நட்பாகி பின்னர் காதல் மலரும். அன்பும், பரிவும், நேசமும் கூட சில சமயம் காதலாக கனியும். காதல் உணர்வுகளும், காதல் நினைவுகளும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி நேர்மறை எண்ணத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காதல் உணர்வுகளை 8 விதமாகவும் பிரித்துள்ளனர் நிபுணர்கள் உங்கள் காதல் எப்படிப்பட்டது தெரிந்து கொள்ளுங்களேன்.

தோழியா, காதலியா, யாரடி நீ கண்ணே?
ஒருவரை பார்த்த உடன் அவர்மீது உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறதா? அவர் மீது உங்களுக்கு அன்பு, நேசம், இரக்கம் கொள்ளுதல் போன்ற உணர்வுகள் வருகிறதா? அவருடன் நெருக்கமாக இருத்தல், அவர் மனதில் இடம் பெறுதல், அவள் எனக்குச் சொந்தமானவள் போன்ற எண்ணங்கள் வருகிறதா? அவருக்கு உதவி செய்யும் எண்ணம், அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை... இதெல்லாம் தோன்றுகிறதா? அப்படியானால் அவர் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று அர்த்தம். இது காதலாகவோ, நட்பாகவோ மாறக்கூடும்.

வெறும் நட்பு மட்டுமே
உங்கள் இருவருக்கும் இடையே உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. உங்களின் எண்ணங்கள், அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் இருவரும் எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுகிறீர்கள். அவருடன் இருக்கும்போது மனஇறுக்கம் இல்லாமல், கவலையற்று இருப்பதாகத் தோன்றுகிறது. அவர் மீது மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரின் சிந்தனைகள் அதிகமாக ஒத்திருக்கின்றன. உங்களுக்கு இடையே அன்பு, பிணைப்பு அதிகமாக இருக்கிறது எனில் நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

ஆரம்பக் காதல்
நீங்கள் விரும்பும் பெண்ணைப் பார்த்ததும் இதயத்துடிப்பு எகிறும். புது அனுபவமாகத் தோன்றும். நீண்ட நேர பிரிவை மனம் ஏற்றுக்கொள்ளாது. எல்லா நேரங்களிலும் அவள் நினைப்பாகவே இருக்கும். கனவில் வந்து இம்சை செய்வாள். ஆரம்பத்தில் அதிக அன்பும், பின்னர் சற்று மங்கியதாகவும் தோன்றுகிறதா? அவருடன் இருக்கமுடியாத நேரத்தில் வேதனையை உணர்கிறீர்களா, முத்தமிடும் எண்ணமும், தழுவிக் கொள்ளும் எண்ணமும் அதிகரிக்கிறதா? இதற்கு பெயர் `பப்பி லவ்'. பருவ வயதில் தோன்றும் ஆரம்ப நிலைக் காதல் அனேகமாக இந்த வகையைச் சார்ந்தது.

இனக்கவர்ச்சிக் காதல்
`எனக்கு காதல் வந்துவிட்டது என்று தோன்றுகிறது, நான் பார்த்ததிலே அவள்தான் அழகு, அவளை எப்படியாவது மடக்கிவிட வேண்டும்' என்று நினைத்து சாகசங்களைச் செய்து கொண்டு இருக்கிறீர்களா?. அவளை பிரியவே கூடாது என்று நினைக்கிறீர்களா? அவரது அழகில் உணர்ச்சி தூண்டப்படுவது, தகாத கற்பனைகளிலும் மிதப்பது என்று இருந்தால் உங்கள் காதல் இனக்கவர்ச்சி வகையைச் சார்ந்தது. `டீன் ஏஜ்' பருவத்தில் ஏற்படும் உணர்வுகள் இத்தகையதாக இருக்கிறது.

மோக நிலை
நீங்கள் விரும்பும் நபரின் உடல் அமைப்பில் ஈர்ப்பு ஏற்படுகிறதா? அதனால் உங்கள் உணர்வு தூண்டபட்டு, அவரிடம் தனிமையில் பேசும் எண்ணம் வருகிறதா? அப்படியானால் நீங்கள் காதலின் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறீர்கள். அவரை பற்றி எண்ணும் போதே இதயத்துடிப்பு எகிறுகிறது. அவரின் அழைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். நீண்ட நேர பிரிவை தாங்க முடியவில்லையா?, தொடுதல், முத்தமிடுதல் ஆகியவற்றை விரும்புகிறீர்களா? நிச்சயம் இது மோகக் காதல் தான். காதலில் மோகம் அதிகமாவது நல்லதல்ல. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

உணர்ச்சிக் காதல்
எப்போதும் அவரை பற்றிய நினைப்பும், அவருடனேயே இருக்க வேண்டும் என்ற நினைப்பும் வருகிறதா?. அவருக்காக அனைத்தையும் விட்டுத் தரவும் சம்மதிக்கிறீர்களா, மோகம், சிற்றின்பம், முத்தமிடுதல், தழுவிக் கொள்ளும் உணர்ச்சி, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற உணர்வுகள் இருக்கிறதா?. அவர்தான் உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர் என்று நினைக்கிறீர்களா? உங்கள் காதல் உணர்ச்சிமிக்கது. இருவருக்கும் இதே உணர்வு இருந்தால் தவறில்லை. ஒருவர் மட்டும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவது விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மனிதநேயக் காதல்
அவள் மீது நட்பிருக்கிறது ஆனால் மோக உணர்ச்சி இல்லை. அன்பிருக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிருக்கிறது. ஆனால் அது உடல் ஈரப்பு சார்ந்ததல்ல. அவருடன் ஆதரவாக பேசவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. அதைத்தவிர வேறு எந்த விதமான ஆசைகளும் இல்லை என்று உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் காதல் ஆத்மார்த்தமான, மனிதநேயக் காதல். இந்த மேம்பட்ட எண்ணங்கள் உங்கள் விருப்பத்திற்குரியவரை மிகவும் கவர்ந்திழுக்கும். காதலை கனியச் செய்யும்.

ரொமான்ஸ் உணர்வுகள்
எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருப்பதை விரும்புகிறீர்களா?. உங்கள் உலகமே அவரைச் சுற்றி இருப்பதாக நினைக் கிறீர்களா? காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது, எதையும் மனம்விட்டு பேசுவது, உள்ளங்கையை வருடுவது, ஒன்றாக இசை கேட்பது என்று உங்கள் நேரம் கழிகிறதா?. பரிசு பொருட்கள் கொடுப்பது, அவருடன் கனவில் சஞ்சரிப்பது, ஒன்றாகச் சாப்பிட விருப்பம், அவருடன் இருக்கும்போது மட்டும் ரிலாக்சாக இருப்பதாக உணர்கிறீர்களா? இவையெல்லாம் ரொமான்டிக் காதலின் உணர்வுகள். உங்கள் காதல் உன்னதக் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது.



Click it and Unblock the Notifications











