Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
காதலனை சந்தோஷமாக வைக்க சில டிப்ஸ்!!!

ஒரு பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது கடினம் இல்லை. அவளுக்கு ஏதேனும் ஒரு கிப்ட் கொடுத்துவிட்டால், அவள் உருகி, உங்கள் அன்பில் விழுந்துகிடப்பாள். ஆனால் அதுவே ஆண்கள் என்று வரும் போது, ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து, அவர்களிடம் நடக்க வேண்டும். பெரும்பாலான ஆண்கள் சற்று கோபக்காரர்களாகவே இருப்பார்கள். அத்தகையவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பவர்கள், கண்டிப்பாக இதை படிக்க வேண்டும். ஏனெனில் இதில் அந்த ஆண்களை எவ்வாறு நடக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
* காதலனிடம் ஒவ்வொரு முறை பேசும் போதும், அவன் மீது முழு நம்பிக்கை இருக்குமாறு பேச வேண்டும். இவ்வாறு பேசினால், காதலனுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கையும் வருவதோடு, உங்கள் அருகில் அன்போடு வந்து, எப்போதும் உங்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, அவனும் சந்தோஷமாக இருப்பான். இது இருவருக்கும் இடையில் ஒரு பெரும் இணைப்பான ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் முழு நம்பிக்கையுடன் காதலனிடம் பேசினால், அவனும் எப்போதும், மகிழ்ச்சியாக நடந்து கொள்வான்.
* எப்போதும் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை போட வேண்டாம். அதுவும் "ஏன் அங்கு போவதை சொல்லவில்லை?, "ஏன் போன் செய்யவில்லை?" என்று கோபம் கொண்டு, அவனிடம் சண்டை போட வேண்டாம். ஏனெனில் எந்த ஆண்களுக்கும் அடிக்கடி சண்டை போட்டால், அவர்கள் காதல் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, பிரியக் கூட நேரும். ஆகவே அவர்களுக்கு எந்த ஒரு கட்டளையும் இடாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக போகும். அதுவே அவர்களுக்கும் பிடிக்கும். மேலம் ஏதேனும் கோபம் என்றால் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். இல்லையென்றால் அவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் விருப்பம் போய்விடும்.
* ஆண்களின் மனதில் நல்ல பெயரை, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, சமையல் தான். ஆண்கள் எப்போதும் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் சாப்பிடுவர். ஆனால் அவர்களுக்கு வீட்டு சமையல் என்பது மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்களுக்கு சந்தோஷத்தை தர, எதிர்பாராத வகையில், அவர்களுக்கு மிகவும் பிடித்ததை வீட்லேயே சமைத்துக் கொடுத்து அசத்தினால், அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவதுடன், அவர்களுக்கு உங்கள் மீது அன்பும் கூடும்.
* ஆண்களின் சந்தோஷத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் அவர்களை ஆண்கள் விரைவில் வெறுத்துவிடுவர். உதாரணமாக, அவர்கள் தன் நண்பர்களுடன் எங்கேனும் வெளியே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, போகும் போது பேசாமல் விட வேண்டும். அந்த நேரத்தில், அவர்களிடம் இத்தனை மணிக்கு என்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவர்களது சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாக இருக்கக் கூடாது. அப்போது அவர்களிடம் நீங்கள் சென்று வாருங்கள், நாம் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்று சற்று விட்டுக் கொடுத்து பேசினால், அவர்கள் சந்தோஷப்படுவதோடு, அந்த நேரத்தில் அவர்கள் மனதில் நீங்கள் மிகவும் பிரியமுள்ளவர்களாக இருப்பீர்கள்.
* சிலசமயங்களில் அவர்கள் சற்று கவலையோடு இருப்பதோடு, அவர்களை சற்று அணைத்து, எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சற்று ஆறுதலாக பேசி முத்தம் கொடுத்தால், அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, அவர்கள் உள்ளமும் மகிழ்ச்சியடையும்.
ஆகவே மேற்கூறியவாறு நடந்து கொண்டால், ஆண்கள் மகிழ்ச்சியடைவதோடு, தன் காதலி மீது அன்பு அதிகரிக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் காதல் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
