Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???

அப்படி என்னதான் உங்கள் கணவரிடம் ஆயிரம் முறை என்ன, மில்லியன் முறை "ஐ லவ் யூ" என்று சொல்லலாம். ஆனால் அப்படி சொல்லி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை விட கண்களால், அன்போடு தொடுவதால், இதயத்தால் சொல்லி புரிய வைக்கலாம். மேலும் தாம் நடந்து கொள்வதின் மூலமும் தங்கள் அன்பை, தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அத்தகைய அன்பை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று சில டிப்ஸ்-ஐ அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர், அது என்னவென்று கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...
1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இரு முறை போன் செய்து விசாரித்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய்து கோபமாக எப்போதும் பேசாமல் அன்போடு கொஞ்சி பேசுங்கள். அதற்காக அடிக்கடி போன் செய்து அவர்களை கோபப்படுத்தி விடாதீர்கள்.
2. கணவன் காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். பின் அவர்கள் சாப்பிட வரும் போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். மேலும் ஆபிஸ் செல்லும் போது அவர்கள் கேட்காமல், அவர்களது பையை எடுத்து கொடுத்து டாடா காண்பிக்கலாம்.
3. மேலும் அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், உங்களுக்கு பிடித்த லிப் ஸ்டிக்கை போட்டு ஒரு பேப்பரில் முத்தம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பலாம்.
4. கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களால் "ஐ லவ் யூ" என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப்போது அவர்கள் படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
5. கணவனை முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என்னென்ன சாப்பிட்டீர்களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவுபடுத்தலாம். இல்லாவிட்டால் அந்நாளன்று இருவரும் சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம்.
6. டென்சனாக வரும் போது, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவை சமைத்து கொடுத்து, அன்போடு பேசி, வேடிக்கையான செயல்கள் ஏதேனும் செய்து அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பதன் மூலம் தெரியப்படுத்தலாம்.
இப்படிச் செய்து பாருங்களேன்...பிறகு
உன் விழி பார்த்தேன்
என் மொழி மறந்தேன்... என்று உங்கள் கணவர் கவிதை பாடினாலும் பாடுவார்...



Click it and Unblock the Notifications