Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்

எனவே தம்பதியரின் வாழ்க்கையில் தடங்கல் இல்லாத சந்தோசம் நீடிக்க அடிக்கடி அவுட்டிங் போக வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் இதை உறுதிபடுத்தியுள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும் தம்பதியரிடையே அன்பு நீடிக்க வேண்டுமா? அடிக்கடி சினிமா, பீச், பார்க் என்று அவுட்டிங் போங்க உங்க தாம்பத்ய வாழ்க்கை உற்சாகமாகும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.
தம்பதியரிடையே உள்ள உறவு பரிமாற்றம், குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உற்சாக காதல் உணர்வு
திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பின்னும் உற்சாகத்துடன் உறவில் ஈடுபடுவதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னரும் கணவருடன் சினிமா, பார்க் என அவுட்டிங் செல்வது தங்களுக்கு உற்சாகத்தையும், இளமையையும், காதல் உணர்வுகளையும் புதுப்பிக்கின்றது என்றும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.
திருமண வாழ்க்கையில் போரடிக்காமல் இருக்கவும் சுவாரஸ்யத்தை தக்கவைக்கவும் வாரம் ஒருமுறையாவது தம்பதியர் தனியாக ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுலா, பார்ட்டி என எங்காவது தனியாக செல்லலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அப்படி செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிப்பதோடு தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையாமல் இருக்கும் என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
மகிழ்ச்சி பரிமாற்றம்
தாம்பத்ய உறவு மட்டுமல்லாது சிறு, சிறு அன்பு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
வளர்ந்த குழந்தைகள் இருந்த போதிலும், தம்பதியர் தங்களின் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை வாழலாம். அதேபோல் குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் அவர்களும் பெற்றோர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
மணமுறிவை தவிர்க்கலாம்
தாம்பத்ய உறவு தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தாம்பத்யம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் திருப்தியில்லாத உறவின் மூலம் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன.
மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, மனதை காயப்படுத்திவிடக்கூடாது. எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications