Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
சப்பாத்திக்கு காய்கறிகளை வெச்சு இப்படி வெள்ளை குருமா செய்யுங்க.. சும்மா அள்ளும்..
White Veg Kurma Recipe: உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் குருமா செய்ய சொல்கிறார்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிடமாட்டார்களா? அவர்களை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் காய்கறிகளைக் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த வெள்ளை காய்கறி குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, இடியாப்பத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு வெள்ளை குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 8
* பச்சை மிளகாய் - 2
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
குருமாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 6 (நறுக்கியது)
* பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை,
முந்திரி சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய், சோம்பு,
கசகசா ஆகியவற்றை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து,
வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை
சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட
வேண்டும்.
* பிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, காய்கறிகளை மூடி வைத்து 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து, கிளறி 2 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் பச்சை வாசனை
போக கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை
சாற்றினை ஊற்றினால், சுவையான ஒயிட் வெஜ் குருமா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications
