Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஒயிட் சாஸ் பாஸ்தா
பாஸ்தாவில் ஒயின் சாஸ் பாஸ்தா மிகவும் ருசியான ரெசிபி. இதை பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஒயிட் சாஸ் பாஸ்தாவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
பாஸ்தா மிகவும் பிரபலமான ஒரு இத்தாலியன் ரெசிபி. பாஸ்தாவில் ஒயின் சாஸ் பாஸ்தா மிகவும் ருசியான ரெசிபி. இதை பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஒயிட் சாஸ் பாஸ்தாவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஒயிட் சாஸ் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 1 கப் (100 கிராம்)
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* காளான் - 5-6 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* கார்ன் - 1/4 கப்
* குடைமிளகாய் - 1/2
வெள்ளை சாஸ் செய்வதற்கு...
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - 2 கப்
* உலர்ந்த துளசி/பேசில் இலைகள் - 1/4 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
* உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சேர்த்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பாஸ்தாவை சேர்த்து, 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பாஸ்தா நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் காளானை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பட்டாணி, கார்ன், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி 2-3 நிமிடம் வதக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு, அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதாவை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கிளறி, பின் அதில் பாலை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
* பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், வேக வைத்துள்ள பாஸ்தா, துளசி இலைகள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் சிறிது பார்மீசியன் சீஸ் தூவி பரிமாறினால், சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
