Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
White Sauce Pasta Recipe In Tamil: கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பார்கள். இந்நிலையில் காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து கொடுத்தால், ஒரு கட்டத்தில் அவர்கள் சாப்பிட மறுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமான அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ரெசிபிக்களை செய்து கொடுக்க வேண்டும்.
அதுவும் காலையில் என்ன டிபன் வித்தியாசமாக செய்து கொடுப்பது என்று நீங்கள் கேட்டால், உங்கள் வீட்டில் பாஸ்தா இருந்தால், அதைக் கொண்டு ஒயிட் சாஸ் பாஸ்தாவை செய்யுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஒயிட் சாஸ் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
பாஸ்தா வேக வைப்பதற்கு...
* பாஸ்தா/மக்ரோனி - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
ஒயிட் சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டீஸ்பூன்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 100 மிலி
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள், உப்பு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி
இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி,
1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நீர் நன்கு
கொதிக்க தொடங்கியதும், பாஸ்தாவை சேர்த்து கிளறி, ஒரு 5 நிமிடம் வேக
வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மைதாவை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும். நன்கு க்ரீமியாக வரத் தொடங்கியதும், அதில் மிளகுத் தூள்,
உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கிளறி, பின் சில்லி
ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5
நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் க்ரீமியான ஒயிட் சாஸ்
பாஸ்தா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
