Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
கோதுமை ரவை பாயாசம்
மாலை வேளையில் உங்களுக்கு திடீரென்று பாயாசம் செய்து சாப்பிட ஆசையாக உள்ளதா? அதுவும் வித்தியாசமான பாயாசத்தை சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கோதுமை ரவை கொண்டு அட்டகாசமான ஒரு பாயாசத்தை செய்யலாம்.
மாலை வேளையில் உங்களுக்கு திடீரென்று பாயாசம் செய்து சாப்பிட ஆசையாக உள்ளதா? அதுவும் வித்தியாசமான பாயாசத்தை சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா என்று பாருங்கள். இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு பாயாசத்தை செய்யலாம். இது செய்வது மிகவும் எளிது. அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும்.

இப்போது கோதுமை ரவை பாயாசத்தின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* கோதுமை ரவை - 1/2 கப்
* ஜவ்வரிசி - 1/4 கப்
* தண்ணீர் - 1.5 கப்
* வெல்லம் - 1 கப்
* தேங்காய் பால் - 2 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, 5-10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
* பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
* இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், அதில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.
IMAGE COURTESY: yummytummyaarthi



Click it and Unblock the Notifications