Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
2 ஸ்பூன் கோதுமை மாவு வெச்சு.. ஈவ்னிங் இந்த கூழ் செஞ்சு குடிங்க.. வயிறும் நிறையும்.. ருசியாவும் இருக்கும்..
Wheat Koozh Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எப்போதும் காபி, டீயை குடிக்க கொடுப்பதற்கு பதிலாக, அவ்வப்போது கூழ் செய்து கொடுங்கள். இதனால் வயிறும் நிறையும், உடலுக்கு சத்தும் கிடைக்கும்.
அதுவும் வீட்டில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கூழ் செய்யுங்கள். இந்த கூழ் மாலை வேளையில் மட்டுமின்றி, காலையில் குடிக்கவும் ஏற்றதாக இருக்கும். ஒருமுறை இந்த கூழை செய்து குடித்தால், அடிக்கடி செய்து குடிப்பீர்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை கூழ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 1/2 டம்ளர்
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 2 சிட்டிகை
* வெல்லம் - 1/4 கப் (அ) சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 1/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை போட்டு,
அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 2
சிட்டிகை சுக்கு பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* நன்கு கூழ் பதத்திற்கு ஓரளவு கெட்டியாகி வந்ததும், அதில்
சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க
வேண்டும்.
* வெல்லமானது நன்கு கரைந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 1
கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால், சுவையான கோதுமை கூழ் தயார்.



Click it and Unblock the Notifications