Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கோதுமை தோசையை ஒரு டைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Wheat Flour Vegetable Dosa Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு ஏதும் இல்லையா? வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு தோசை சுடுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் கோதுமை தோசை போன்று செய்யாமல், அத்துடன் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்து தோசை சுடுங்கள்.
இதனால் இந்த தோசையின் சுவை இன்னும் அதிகரிப்பதோடு, மிகவும் சத்தானதாகவும் இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி போன்றவை அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை மாவு வெஜிடேபிள் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு வெஜிடேபிள் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* கோதுமை மாவு - 1 கப்
* பச்சரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, கோதுமை மாவு,
பச்சரிசி மாவு, ரவை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக நீரை
ஊற்றி கட்டிகளின்றி சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை 20 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி,
பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து, தோசை மாவு மிகவும் கெட்டியாக
இருந்தால், ரவை தோசை பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்
சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை அள்ளி சுற்றி ஊற்ற வேண்டும்.
கரண்டியால் தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால் தோசை நன்றாக இருக்காது.
பின் எண்ணெயை ஊற்றி பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், கோதுமை
மாவு வெஜிடேபிள் தோசை தயார். இந்த தோசையை திருப்பி போட்டு வேக வைக்க
வேண்டுமென்ற அவசியம் இல்லை.
Image Courtesy: Awesome Cuisine



Click it and Unblock the Notifications
