Latest Updates
-
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்..
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Gothumai Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை ஆற்ற வேண்டுமா? அதுவும் நல்ல ஆரோக்கியமான அதே சமயம் பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று அரிசி மாவைக் கொண்டு புட்டு செய்யாமல், கோதுமை மாவைக் கொண்டு ஒருமுறை புட்டு செய்யுங்கள். இந்த புட்டு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப் + 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு துணியில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, மூட்டையாக
கட்டி, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மூட்டையை வெளியே எடுத்து, அந்த மாவை ஒரு அகலமான தட்டில்
எடுத்துக் கொண்டு, கட்டிகளின்றி நன்கு உதிர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு 3/4 கப் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து,
அந்நீரை வேக வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து நன்கு
பிசைந்து உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மாவை சல்லடையில் ஒருமுறை சலித்து கட்டிகளின்றி மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, அந்த
மாவை மீண்டும் துணியில் போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து,
மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* மாவு வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு மாவை நன்கு உதிர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் தூள், 1/2 கப் துருவிய தேங்காய், பொடித்த
சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறினால், சுவையான கோதுமை
புட்டு தயார்.



Click it and Unblock the Notifications
