Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கோதுமை மாவை வெச்சு ஒருமுறை காலையில் இந்த டிபனை செய்யுங்க. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது...
Gothumai Adai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு காலை டிபனை செய்யுங்கள். அதற்காக தோசை, சப்பாத்தி என்று செய்யாமல், அதைக் கொண்டு அடை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு கோதுமை அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 3/4 கிலோ
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின் கைகளால் அவற்றை பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 15 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி பிரித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை
வைத்து, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள அடையை சேர்த்து, எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து,
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை
அடை தயார். இதேப் போல் அனைத்து மவையும் சுட வேண்டும்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications