Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. கெட்ட நீர் வெளியேறி, உடல் எடை புல்லட் வேகத்துல குறையும்...
Weight Loss Barley Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க நினைக்கிறீர்களா? அதற்காக கடுமையான டயட்டை எல்லாம் பின்பற்றுகிறீர்களா? ஆனால் உங்களால் அப்படி கடுமையான டயட்டை பின்பற்ற முடியவில்லையா? கவலை வேண்டாம். இத்தகையவர்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்படியான உணவுகளை தினசரி உட்கொண்டு வந்தாலே நல்ல மாற்றத்தைக் காணலாம்.
அதில் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும் ஒரு அற்புதமான உணவு தான் கஞ்சி. அதுவும் பார்லியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடம்பில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் வெளியேறிவிடும். இதன் விளைவாக நீர் உடம்பை கொண்டிருந்தால், புல்லட் வேகத்தில் உடல் எடை குறையும். குறிப்பாக இந்த பார்லி கஞ்சியை தினமும் காலையில் 1 கப் உட்கொண்டு வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

உங்களுக்கு பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி அரிசி - 100 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பார்லி அரிசியை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்கும்
முன் ஊற வைத்தால் சரியாக இருக்கும்.
* பின் காலையில் ஊற வைத்த பார்லி அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, இஞ்சி பூண்டு
பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி,
ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள பார்லியை சேர்த்து, கஞ்சிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சி மிகவும் கெட்டியாக
இருந்தால் அதில் வேண்டுமானால் சுடுநீரை ஊற்றி கலந்து, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications