Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பார்லியை இந்த மாதிரி செஞ்சு அடிக்கடி சாப்பிடுங்க.. உடல் எடை கடகடன்னு வேகமாக குறையும்..
Weight loss Barley Kichadi Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், தினமும் காலையில் ஓட்ஸை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஓட்ஸை தினடும் சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த பார்லியை சேர்த்து வாருங்கள். பார்லி அரிசியைக் கொண்டு வெறுமனே கஞ்சி மட்டும் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதைக் கொண்டு கிச்சடியும் செய்யலாம். இந்த கிச்சரியை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், விரைவில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் பார்லி கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி அரிசி - 1/2 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (இரண்டாக உடைத்தது)
* சாம்பார் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 6 டம்ளர்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பார்லி அரிசியை 1/2 டம்ளர் எடுத்து, நீர் ஊற்றி, 1
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, குக்கரில் 1/2 டம்ளர் பாசிப்பருப்பை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த பார்லி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து, பின் அதில் நீரை ஊற்றி, பருப்பு மற்றும் பார்லி அரிசியை
நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள், நறுக்கிய தக்காளி, பெருங்காயத் தூள்,
மஞ்சள் தூள், சீரகம், பச்சை மிளகாய், சாம்பார் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 6 டம்ளர் நீரை ஊற்றி, பொடியாக நறுக்கிய கேரட்டை
சேர்த்து கலந்து, குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 6 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக தட்டிய மிளகு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி வதக்கி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் வேக
வைத்துள்ள பார்லி அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கிளறி, 1 கொதி
வந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பார்லி கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications











