Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட...
Weight Loss Kollu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் நிச்சயம் ரசம் செய்வீர்கள். ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? அப்படியானால் இன்று கொள்ளு ரசம் செய்யுங்கள். இந்த ரசம் மிகவும் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த ரசத்தை அடிக்கடி செய்து உட்கொள்ளும் போது, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதுவும் வாரம் ஒருமுறை கொள்ளு பருப்பை உணவில் சேர்க்கும் போது, உடல் வலுவடையும்.

உங்களுக்கு கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/2 கப்
* தக்காளி - 2
* தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
* புளி - எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - சிறிது
* பூண்டு 3 பல்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு பருப்பை எடுத்து, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கழுவிய கொள்ளு பருப்பை சேர்த்து,
அத்துடன் 2 தக்காளியை முழுமையாக சேர்த்து, குக்கரை மூடி உயர் தீயில்
வைத்து 4 விசிலும், பின் மிதமான தீயில் வைத்து 2 விசிலும் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி
எடுத்து, அத்துடன் வேக வைத்த தக்காளியையும் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அந்த நீரில் 1 எலுமிச்சை அளவு புளியை சேர்த்து, 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, பொடியாக நறுக்கிய 2 சின்ன வெங்காயம், நறுக்கிய
பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து வடிகட்டி, அந்த
நீரை வாணலியில் ஊற்றி, பின் தேவையான அளவு நீரையும் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பையும் தூவி நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் இடி உரலில் மிளகு, சீரகம், கட்டிப் பெருங்காயம் மற்றும்
பூண்டு பற்களை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* ரசம் நன்கு நுரைத்து கொதிக்கத் தொடங்கியதும், அதில் அரைத்து
வைத்துள்ள மிளகு சீரகத்தை சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லியைத்
தூவி, 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொள்ளு ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications