Latest Updates
-
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது!
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க!
Weight Loss Thinai Aval Kanji Recipe In Tamil: தற்போது உடல் பருமனால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பலர் டயட்டில் இருப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். நீங்களும் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா?
அதுவும் உங்களின் டயட்டில் எந்த உணவுகளும் சுவையில்லாமல் தான் இருக்குமா? அப்படியானால் கஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் தினை அவல் கஞ்சியை தயாரித்து தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

அதுவும் இந்த கஞ்சியுடன் கேரட், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் போன்றவை சேர்க்கப்படுவதால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த கஞ்சி சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த தினை அவல் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை அவல் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தினை அவல் - 1 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் ஸ்வீட் கார்னை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்னர் தினை அவலை சேர்த்து நன்கு கிளறி, அவல் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் இன்னும் சிறிது சுடுநீரை
சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான தினை அவல் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications