Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
தினமும் காலையில் 3 முட்டையை இப்படி சாப்பிடுங்க... உடல் எடையும் குறையும்.. ருசியானதும் கூட...
Vegetable Egg Omelette Recipe In Tamil: தினமும் முட்டை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும். முக்கியமாக ஒரு முட்டையில் 6 கிராம் அளவில் நல்ல தரமான புரோட்டீன் உள்ளது. அதோடு முட்டையில் 9 விதமான அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.
மேலும் ஒரு முட்டையில் 5 கிராம் அளவில் நல்ல கொழுப்புக்களும், எந்த உணவிலும் இல்லாத வைட்டமின் டி சத்தும் உள்ளது. இப்படிப்பட்ட முட்டையை சாப்பிட்டால் உடல் பருமனாகிவிடும் என்று நினைத்து, நிறைய பேர் முட்டை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

ஆனால் முட்டையை நாம் காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டால், கூடுதல் சத்துக்கள் கிடைப்பதோடு, எடை இழப்புக்கும் உதவும். அதுவும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையுடன் காய்கறிகளை சேர்த்து ஆம்லெட் போன்று செய்து சாப்பிடும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும்.
உங்களுக்கு வெஜிடேபிள் முட்டை ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் முட்டை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 கப் (துருவியது)
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* முட்டை - 3
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 3 முட்டைகளை உடைத்து, அவற்றின் வெள்ளைக்கருக்களை
தனியாகவும், மஞ்சள் கருக்களை தனித்தனியாகவும் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட் மற்றும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத் தூள், மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள கலவையை தோசைக்கல்லில் மூன்று பகுதிகளாக பிரித்து ஊற்றி,
அவற்றின் நடுவே குழி போன்று செய்து, மஞ்சள் கருக்களை ஒவ்வொன்றின்
குழியிலும் ஊற்றி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் திருப்பிப்
போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் முட்டை ஆம்லெட்.



Click it and Unblock the Notifications