Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
கிராமத்து ஸ்டைல் மட்டன் நெஞ்செலும்பு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? இது நெஞ்சு சளியை கரைக்குமாம்..
Village Style Mutton Elumbu Kuzhambu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் நெஞ்செலும்பு வாங்கி வந்து, அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். அதுவும் கிராமத்து ஸ்டைலில் மசாலாவை வதக்கி அரைத்து குழம்பு செய்யுங்கள்.
இந்த மட்டன் நெஞ்செலும்பு குழம்பு நெஞ்சு சளியைக் கரைக்க உதவும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் மட்டன் நெஞ்செலும்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் மட்டன் நெஞ்செலும்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 12
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மட்டன் நெஞ்செலும்பு - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 3 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* பூண்டு - 5- பல்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 2 இதழ்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மட்டனை வேக வைப்பதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்
1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 12 சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் வெளிர் நிறத்திற்கு மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் பெரிய தக்காளியை நறுக்கிய சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீர், சுமார் 1/2
லிட்டருக்கும் அதிகமாக நீரை ஊற்றி கிளறி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மசாலாவிற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 20 சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாப்பூ, சோம்பு, சீரகம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் 3/4 கப் துருவிய தேங்காய் மற்றும் 1 டீஸ்பூன் கசகசாவை
சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குழம்பிற்கு 1 1/4
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, மஞ்சள் தூள்
மற்றும் கரம் மசாலா சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால்
சிறிது உப்பையும் சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கிராமத்து ஸ்டைல்
மட்டன் நெஞ்செலும்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications