Latest Updates
-
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும்
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும்
Village Style Chicken Peratal Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுக்கான நாள் என்று மாறிவிட்டது. ஞாயிறு காலையில் கண் விழிக்கும் போதே கறியைப் பார்த்தால்தான் பெரும்பாலான மக்களுக்கு சண்டே மகிழ்ச்சியாகத் தொடங்கும். அனைத்து நாட்களிலும் அசைவ உணவுகள் கிடைத்தாலும் சண்டே அசைவம் எப்போதுமே கூடுதல் ஸ்பெஷல்தான். பொதுவாக அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.

சமையல் என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை ஆயிரக்கணக்கான வழிகளில் சுவையாக சமைக்கலாம். கிராமத்து உணவுகள் என்றாலே அதன் சுவை மிகவும் தனித்துவமானதாக இருக்கும். நீங்கள் கிராமத்து ஸ்டைலில் சிக்கனை சமைக்க விரும்பினால் ஒரு முறை சிக்கன் பிரட்டலை செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் பிரட்டலை பிராய்லர் சிக்கனிலும் செய்யலாம், நாட்டுக்கோழியிலும் செய்யலாம்.
உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பிரட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ சிக்கன்
- 6 பூண்டு பல்
- 2 பெரிய வெங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 4 ஸ்பூன்
- 1 இன்ச் பட்டை
- 2 அன்னாசி பூ
- 4 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 2 ஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 தக்காளி (நறுக்கியது)
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1 ஸ்பூன் சோம்புத்தூள்
- 2 ஸ்பூன் கறி மசாலா தூள்
- 1 ஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் கொத்தமல்லி
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்கு கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
- பூண்டு, இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து, தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சிக்கன் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவற்றைச் எடுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில், இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சுமார் 30 வினாடிகள் வதக்கவும்.
- பின்னர் வெங்காய விழுதைச் சேர்த்து, மேலும் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சோம்புத்தூள், கறி மசாலா தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
- சிக்கனை மீண்டும் வாணலியில் சேர்த்துக் கிளறவும். இது கொதி நிலைக்கு வந்தவுடன், சுமார் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் பாத்திரத்தை மூடி, தீயைக் குறைத்து மிதமான நிலையில் வைக்கவும்.
- அடிக்கடி சிக்க்கனை கிளறி 30 நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் அட்டகாசமான சிக்கன் பிரட்டல் ரெடி!



Click it and Unblock the Notifications