Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் வேர்க்கடலை இருந்தா.. மழை நேரத்தில் இப்படி பெப்பர் சுக்கா செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Verkadalai Pepper Chukka Recipe In Tamil: மழை நேரத்தில் நன்கு காரசாரமாகவும், அதே சமயம் சத்தானதாகவும் சாப்பிட தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலை கொண்டு வாய்க்கு ருசியான பெப்பர் சுக்கா செய்யுங்கள்.
இந்த சுக்கா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த சுக்காவை சாப்பிட்டால் மட்டன் சுக்கா போன்று இருக்கும். இதை சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை பெப்பர் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை பெப்பர் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* பட்டை - 3 இன்ச்
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1
* மராட்டி மொக்கு - 1
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த வேர்க்கடலை - 1 கப்
* தண்ணீர் - 1 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய்,
கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, மராட்டி மொக்கு சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு அதில்
காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒருமுறை கிளறி, வேக
வைத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறி, மூடி வைத்து நன்கு நீர் சுண்ட
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வேர்க்கடலை
பெப்பர் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications
