Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த குருமா செய்யுங்க...தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்!
Verkadalai Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வாய்க்கு ருசியாக, அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு கப் வேர்க்கடலையும், கொஞ்சம் தேங்காயும் இருந்தால், அருமையான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை - ஒரு கப்
- நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
- பச்சை மிளகாய் - 2
- ஏலக்காய் - 1
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கிராம்பு - 2
- இலவங்கப்பட்டை - 1
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- நிலக்கடலையை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பச்சை வாசனை போனதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும் அதில் மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- இந்த கலவையை நன்றாக கிளறிய பிறகு வேகவைத்த நிலக்கடலையை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- குருமா நன்கு கெட்டியான பிறகு அதில் துருவிய தேங்காயை தூவி இறக்கினால் அருமையான வேர்க்கடலை குருமா ரெடி.
- இந்த குருமா தோசை மற்றும் சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
