Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
வேர்க்கடலை சட்னியை ஒருடைம் இப்படி அரைச்சு பாருங்க... டேஸ்ட் இன்னும் வேற லெவல்-ல இருக்கும்...
Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சிம்பிளான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று வேர்க்கடலை சட்னியை செய்யாமல், சற்று புதுமையான முறையில் இந்த சட்னியை ட்ரை செய்யுங்கள். இதனால் சட்னியின் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்யும் போது வீட்டில் உள்ளவர்கள் 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 100 கிராம்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 6
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பத்ற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, அதன் தோலை நீக்கி விட
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, நன்கு
தக்காளி வேகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து சுருங்கும் வரை வதக்கி,
வேர்க்கடலையை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











