Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வெந்தயக்கீரை வெச்சு ஒருடைம் இப்படி சாம்பார் செய்யுங்க.. உடல் சூடும் குறையும்.. டேஸ்ட்டும் நல்லா இருக்கும்..
Vendhaya Keerai Sambar In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டு வந்தாலே, உடல் சூடு பிடித்துக் கொண்டு, நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் கோடையில் உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் சூடும் குறையும், உடலுக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வர, பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக கோடையில் கீரையை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதுவும் வாரத்திற்கு 2 முறை சேர்ப்பது நல்லது.

கீரையில் பல உள்ளன. அதில் ஒன்று தான் வெந்தயக்கீரை. இந்த கீரை சற்று கசப்பாக இருக்கும். ஆனால் இது உடல் சூட்டைக் குறைப்பதில் சிறந்தது. இந்த கீரையை வாங்கினால், அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுவதை விட, சாம்பார் செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும். இந்த கீரை சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு வெந்தயக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெந்தயக்கீரை - 1 கட்டு
* துவரம் பருப்பு - 1/2 கப்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெந்தயக்கீரையின் இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பை போட்டு 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் 1 கப் நீரை ஊற்றி, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும். அதன் பின் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, கைகளால்
பிசைந்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை போட்டு,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை மசித்து சேர்த்து, அத்துடன்
சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் ஊற வைத்து கரைத்து வைத்துள்ள புளி நீரை சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து கிளறி, பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். சாம்பார் மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, நன்கு கொதி வந்ததும் அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான வெந்தயக்கீரை சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications