Latest Updates
-
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும்
Vendakkai Urulaikilangu Masala Recipe in Tamil: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகளை நம் உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக வெண்டைக்காயை நாம் சாம்பார், புளிக்குழம்பு அல்லது பொரியல் என்று ஒரே மாதிரியாக சமைத்திருப்போம். ஆனால் வெண்டைக்காயை வைத்து பல வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகளை சமைக்கலாம்.

அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது வேர்க்கடலை சேர்த்து செய்யப்படும் வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெசிபியைத்தான். இந்த வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும். இல்லையெனில் இதை அப்படியே சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம். இந்த பொரியல் சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானது கூட. இதுபோல வெண்டைக்காயை செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த வெண்டைக்காய் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் உருளை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ வெண்டைக்காய்
- 2 உருளைக்கிழங்கு
- 2 ஸ்பூன் கெட்டித் தயிர்
- 4 ஸ்பூன் வேர்க்கடலை எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 4 அரைத்த தக்காளி
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் வறுத்த வேர்க்கடலை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- முதலில் வேர்க்கடலையை தோல் நீக்கி பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெண்டைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை ஒரு வாணலியில் போடவும். அதனுடன் சிறிது எண்ணெய் மற்றும் ஓரிரு மேசைக்கரண்டி அளவு தயிர் சேர்க்கவும்.
- தயிர் சேர்ப்பது வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையைக் குறைக்க உதவும். மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, உருளைக்கிழங்கு நன்கு மென்மையாகும் வரை வேகவைக்கவும். பின்னர் அதையும் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், சீரகம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து தாளிக்கவும்.
- சீரகம் பொரிந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, லேசான பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கும் போதே தக்காளியை மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதன்பின் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் அரைத்த தக்காளியைச் சேர்க்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மசாலா பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
- பாத்திரத்தை மூடி, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கிளறிவிடவும்.
- பின்னர் வேக வைத்த வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.
- காய்கறிகளில் மசாலா சேர்ந்ததும் அரைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலா நன்கு கெட்டியானதும் அதனுடன் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் உருளை மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
