Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
Vendakkai Thokku Recipe In Tamil: பொதுவாக வெண்டைக்காயை பொரியல், சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு தொக்கு செய்துள்ளீர்களா? வெண்டைக்காயில் தொக்கா என்று கேட்கலாம். ஆம், வெண்டைக்காய் கொண்டு ஒருமுறை தொக்கு செய்யும் போது, அதை மூன்று வேளையும் வைத்து சாப்பிடலாம்.

முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் வெண்டைக்காய் தொக்கு செய்து கொடுங்கள், சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இந்த தொக்கு இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த வெண்டைக்காய் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்டைக்காய் - 400 கிராம்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1
* பூண்டு - 4-5 பல்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸபூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து,
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து, 1 டீஸ்பூன்
உப்பு சேர்த்து நன்கு பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க
வேண்டும்.
* வெண்டைக்காயில் பிசுபிசுத்தன்மை போனதும், நறுக்கிய தக்காளியை
சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பூண்டு,
மிளகாய் தூள் மற்றும் புளியை சேர்த்து வாணலியின் சூட்டில் வதக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, முதலில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வதக்கிய வெண்டைக்காய் கலவையை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட்டு, பின்
அதில் பெருங்காயத் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து கிளறி,
அரைத்ததை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், வெண்டைக்காய் தொக்கு
தயார்.



Click it and Unblock the Notifications
