Latest Updates
-
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
12 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் ரயில் எது தெரியுமா? -
சிக்கன் வாங்குனா இந்த மலபார் சிக்கன் பிரியாணியை ஒருதடவை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி பாயசம் வைச்சு பாருங்க - பிரமாதமா இருக்கும் -
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
Vendakkai Thakkali Kuzhambu Recipe in Tamil: தினமும் சாம்பார், ரசம் வைத்து போரடித்து விட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக சமையலை முடிக்க விரும்புகிறீர்களா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் சுவையான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காயும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து ஒரு சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பை செய்யுங்கள்.

இந்த வெண்டைக்காய் தக்காளி குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.
உங்களுக்கு சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தக்காளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- சோம்புத் தூள் - 1 ஸ்பூன்
அரைக்கத் தேவையானவை:
- தேங்காய் - அரை கப்
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - 3 பல்
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் உரித்த பூண்டை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளியை எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் சோம்புத் தூளை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கைகளால் தக்காளிகளை நசுக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து, அடுப்பில் வைத்து அது நன்கு வேகும் வரை சமைக்கவும்.
- அதன்பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதை குழம்பின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
