Latest Updates
-
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும்
சத்தான... வெஜிடபிள் ஊத்தாப்பம்
சற்று சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும்.
காலையில் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? சற்று சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடபிள் ஊத்தாப்பத்தின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேவையான அளவு
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஓரளவு கெட்டியான தோசை மாவை எடுத்துக் கொள்ளவும்.
* பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.
* பிறகு அதன் மேல் சிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.
* பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.
இந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி மிகவும் அற்புதமாக இருக்கும்.
குறிப்பு:
வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேவையான காய்கறிகள் முற்றிலும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் வேகமாக வெந்துவிடும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications