Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
வீட்டில் செய்யப்படும் தேங்காய் சட்னியோ, ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி போல் இருக்காது. உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?
நம்மில் பலருக்கும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சட்னிகள் என்றால் பிடிக்கும். அதில் குறிப்பாக நிறைய பேருக்கு பிடித்தது எனில், அது தேங்காய் சட்னி தான். நாமும் வீட்டில் தேங்காய் சட்னியை அரைத்து, இட்லி, தோசைக்கு சாப்பிட்டதுண்டு. ஆனால் வீட்டில் செய்யப்படும் தேங்காய் சட்னியோ, ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி போல் இருக்காது.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இந்த தேங்காய் சட்னியை முயற்சித்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* சீரகம் - ஒரு சிட்டிகை
* உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்!



Click it and Unblock the Notifications
