Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
உருளைக்கிழங்கு தோசை
தோசையை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். அதிலும் தோசைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடக்கூடிய வகையில் ஒருசில தோசைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் உருளைக்கிழங்கு தோசை.
இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு போல் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவ வேண்டும்.
பின் தவா சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து, தீயை குறைவில் வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
குறிப்பு:
இந்த தோசை மொறுமொறுவென்று வருவதற்கு, சாதாரண தோசையை விட நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். அதாவது குறைந்தது 4-5 நிமிடம் வேண்டும்.



Click it and Unblock the Notifications