Latest Updates
-
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!
தக்காளி குருமா
காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது, தோசை அல்லது இட்லிக்கும், சாதத்திற்கும் ஏற்றவாறான சைடு டிஷ் என்ன உள்ளது என்று யோசித்தால், அப்போது தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் ஈஸி.
இங்கு அந்த தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை காலை வேளையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)ங
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/4 இன்ச்
பச்சை மிளகாய் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்க மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்ல தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!
இதுப்போன்று சுவையான வேறு பல ரெசிபிக்களைப் பெற, எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்.



Click it and Unblock the Notifications
