Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தீயல் குழம்பு
தமிழ்நாட்டில் பிரபலமானது தான் தீயல் ரெசிபி. பொதுவாக இந்த ரெசிபியானது புளிக்குழம்பு போன்று இருக்கும். இந்த தீயல் ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான். அதிலும் இந்த மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், தீயல் ரெசிபியின் சுவைக்கு இணையாக எதுவும் வர முடியாது.
மேலும் தீயல் ரெசிபியில் நமக்கு வேண்டிய எந்த ஒரு காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இங்கு முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் பயன்படுத்தி தீயல் ரெசிபியானது செய்யப்பட்டுள்ளது. சரி, இப்போது தீயல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து ஒரு 5-8 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டால், தீயல் குழம்பு ரெடி!!!
Image Courtesy: Senthil Janaki



Click it and Unblock the Notifications
