Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்
'தாய்' ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானது. மேலும் இந்த உணவுகளில் பல மூலிகைகள் பயன்படுத்துவதால், அந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அந்த வகையில் தாய் ஸ்டைல் தேங்காய் சாதமும் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் செய்து, குழம்புடன் சாப்பிட்டால் சிறந்த சுவை கிடைக்கும்.
இப்போது அந்த தாய் டைல் தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை இலை - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பால், தண்ணீர், எலுமிச்சை இலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பின் அடுப்பில் வைத்து, தீயை குறைவாக வைத்து நன்கு 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரிசியைப் போட்டு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் தீயை குறைவிலேயே வைத்து, அரிசியை வேக வைக்க வேண்டும்.
15 நிமிடம் ஆனப் பின்னர், மூடியைத் திறந்து, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பின் அதில் உள்ள எலுமிச்சை இலையை எடுத்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
இறுதியில் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான தாய் ஸ்டைல் தேங்காய் சாதம் ரெடி!!! இதனை மதிய வேளையில் விருப்பமான குழம்பு ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
