Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
ஸ்வீட் கார்ன் சுண்டல்
சுண்டல் ரெசிபியில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன் என்னும் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சுண்டல். இந்த சுண்டல் ரெசிபி மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் சோளத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. எனவே இன்றைய நவராத்திரி பூஜைக்கு ஸ்வீட் கார்ன் கொண்டு சுண்டல் செய்து அம்மனுக்கு படைக்கலாம்.
சரி, இப்போது அந்த ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1 கப்
துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4-5 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க)
எலுமிச்சை - 1/2
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2-3
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சோளத்தைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், அதிகப்படியான தண்ணீரை வடித்து விட்டு, சோளமணிகளை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, ஓரளவு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த சோளத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி, சூடாக பரிமாற வேண்டும்.
குறிப்பு:
இதனை உடனே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் விட ஆரம்பிக்கும்.
Image Courtesy: chefandherkitchen



Click it and Unblock the Notifications
