Latest Updates
-
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
தித்திப்பான கேரட் சாதம்
கேரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டை அதிகம் சாப்பிட்டால், பார்வைக் கோளாறு வராமல் தடுக்கலாம். குறிப்பாக வளரும் குழந்தைகள், கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது. பொதுவாக கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ், பொரியல் அல்லது காரமான கலவை சாதம் போன்றோ தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் இப்போது அதனை இனிப்பான கேரட் சாதமாக செய்தும் சாப்பிடலாம். இது இனிப்பாக கலவை சாதம் என்பதால், இதனை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். குறிப்பாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சரி, அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 2 (பொரியது மற்றும் துருவியது)
அரிசி - 1 1/2 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 6
பட்டை - 2 இன்ச்
சர்க்கரை - 5-6 டேபிள் ஸ்பூன்
நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை)
பால் - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய கேரட், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை மற்றும் அரிசி சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, தீயை சற்று உயர்த்தி, 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான கேரட் சாதம் ரெடி!!! இதன் மேல் நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications

