Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
பசலைக்கீரை சட்னி
பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும். சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது. ஆனால் அந்த கீரையை சட்னி போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும்.
மேலும் இந்த பசலைக்கீரை சட்னியானது இட்லி தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த பசலைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - 10-15 இலைகள்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
துருவிய தேங்காய் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் பசலைக்கீரையை நீரில் அலசி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களைப் போட்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், சுவையான பசலைக்கீரை சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications