Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
காரமான சிந்தி தால் ரெசிபி
எப்போதும் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு கொண்டு சமைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் ரெசிபியான பருப்பு ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், துவரம் பருப்பிற்கு பதிலாக கடலைப் பருப்பை பயன்படுத்துவது மற்றும் மசாலா பொருட்களை சேர்க்கும் விதம் தான்.
இது ஒரு எளிமையான ரெசிபி மட்டுமின்றி, வித்தியாசமான சுவை கொண்ட ரெசிபியும் கூட. மேலும் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த சிந்தி தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3 (நீளமாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசிலானது போனதும் குக்கரை திறந்து, பருப்பை கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதனை குக்கரில் உள்ள பருப்பில் போட்டு கிளறி, மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு வைக்க வேண்டும்.
அடுத்து அதே வாணலியை அடுப்பில், மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், எஞ்சிய சீரகம், கறிவேப்பிலை, பாதி வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் தாளித்து, பின் பருப்பில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான சிந்தி தால் ரெசிபி ரெடி!!! இதன் மேல் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
