Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
காரமான தேங்காய் கச்சோரி
பொதுவாக தேங்காய் கச்சோரி வட மற்றும் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். அதிலும் இந்த தேங்காய் கச்சோரியை எப்போதும் இனிப்புச் சுவையில் தான் செய்வோம். ஆனால் இப்போது அதனை எப்படி காரமான ஒரு ஸ்நாக்ஸாக செய்வதென்று கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து பார்த்து செய்து பாருங்கள். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மைதா/கோதுமை மாவு - 3 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, அரைத்த தேங்காய் பேஸ்ட்டை போட்டு, 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்பு மல்லி தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை/மைதா மாவைப் போட்டு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, அந்த உருண்டைகளின் நடுவே ஒரு ஓட்டை போட்டு, அதில் தேங்காய் மசாலாவை வைத்து, மூடி, பின்பு அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சிறு பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான தேங்காய் கச்சோரி ரெடி!!! இதனை விருப்பமான மசாலா அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
