Latest Updates
-
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும்
வாழைக்காய் குழம்பு
வாழைக்காய் குழம்பு மிகவும் சுவையான குழம்புகளில் ஒன்று. இந்த குழம்பு, அசைவ குழம்புகளில் சுவையைக் கொடுக்கக்கூடியது. மேலும் வாழைக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஆகவே அத்தகைய வாழைக்காயை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
இப்போது அந்த வாழைக்காயை கொண்டு எப்படி எளிமையான முறையில் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
பட்டை - 1
கிராம்பு - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயின் தோலை சீவி விட்டு, அதனை வட்டமாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா மற்றும் முந்திரி போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் மட்டும் இருக்குமாறு பார்த்து, மீதமுள்ளவற்றை எடுத்துவிட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து, 6-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வாழைக்காய் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
