Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
புடலங்காய் மசாலா
மசாலாக்களில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது உருளைக்கிழங்கு மசாலா தான். ஆனால் பாம்பு போன்ற நீளமாக இருக்கும் புடலங்காய் கொண்டு மசாலா செய்தால், அது உருளைக்கிழங்கு மசாலாவை விட மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த மசாலாவை பேச்சுலர்கள் கூட செய்யலாம்.
இப்போது அந்த புடலங்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் சோம்பு, 2 வரமிளகாய், தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், கடுகு, 1 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புடலங்காயைப் போட்டு நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்பு கடலைப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான புடலங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Image Courtesy: Spicytreats



Click it and Unblock the Notifications
