Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சேப்பங்கிழங்கு ப்ரை
எப்போதும் உருளைக்கிழங்கு ப்ரை செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சேப்பங்கிழங்கு கொண்டு ப்ரை செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிடுங்கள். மேலும் சேப்பங்கிழங்கில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதனால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியுடன் இருக்கும்.
சரி, இப்போது அந்த சேப்பங்கிழங்கு ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, ருசி எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு - 10
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் சேப்பங்கிழங்கை நீரில் மண் முழுவதும் நீங்க நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சேப்பங்கிழங்கை போட்டு, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கி, தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் உப்பு தூவி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
