Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
சேமியா பன்னீர் உப்புமா
காலை வேளையில் எளிதில் சமைக்கக்கூடிய ரெசிபிக்கள் பல உள்ளன. அதில் இட்லி, தோசை, உப்புமா போன்றவை குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்திலும் பல வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் உப்புமாவில் ஒரு வகையைப் பார்க்கப் போகிறோம்.
அது என்னவென்றால், சேமியா பன்னீர் உப்புமா. இந்த சேமியா பன்னீர் உப்புமா செய்வது என்பது மிகவும் எளிது. மேலும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு ரெசிபியும் கூட. சரி, இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சேமியா - 1 1/2 கப்
சீஸ் - 100 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் சேமியாவை போட்டு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் உடனே அதனை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு சீஸ், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்துள்ள சேமியாவை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட்டு, இறக்க வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான சேமியா பன்னீர் உப்புமா ரெடி!!!



Click it and Unblock the Notifications
