Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஜவ்வரிசி உப்புமா
இதுவரை எத்தனையோ உப்புமா ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஜவ்வரிசிக் கொண்டு உப்புமா செய்யலாம் என்பது தெரியுமா? பொதுவாக ஜவ்வரிசி பாயாசம், ஜவ்வரிசி தோசை, ஜவ்வரிசி ஊத்தாப்பம் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது அந்த ஜவ்வரிசியைக் கொண்டு எப்படி உப்புமா செய்வது என்று பார்ப்போம்.
குறிப்பாக இந்த ஜவ்வரிசி உப்புமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் காலை உணவு செய்ய நினைக்கும் போது, இதனை செய்தால் நேரம் மிச்சமாகும். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 2 கப் (2 நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (தோல் சீவி, பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (தோல் சீவி, பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன் (லேசாக பொடித்தது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன், அதில் ஜவ்வரிசி, கேரட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
அடுத்து மூடியைத் திறந்து கிளறி, அதில் வதக்கிய உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி!!!



Click it and Unblock the Notifications
