Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி
பொதுவாக பீர்க்கங்காய் வாங்கி வந்தால், கூட்டு தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த பீர்க்கங்காய் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்தால், அதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
அந்த பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 (தோல் சீவி நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதியில், ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!! இது தோசை, இட்சி மற்றும் சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
Image Courtesy: itsfuncooking



Click it and Unblock the Notifications