Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி
இந்திய உணவுகளில் சைடு டிஷ் என்று வரும் போது பருப்பு சேர்த்து செய்யப்படும் ரெசிபிக்கள் முதன்மையாக இருக்கும். மேலும் நிச்சயம் அனைவரது வீட்டிலும் ஒருசில பருப்புக்கள் ஸ்டாக்கில் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் மைசூர் பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கடைசல் செய்யலாம்.
மேலும் மைசூர் பருப்பானது பித்தநீர் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சரி, இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எப்படி கடைசல் செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு கழுவி போட்டு, பின் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அந்நேரத்தில் குக்கரில் உள்ள விசில் போய்விட்டால், குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு லேசாக கடைய வேண்டும்.
பின்பு அடுப்பில் உள்ள வாணலியில் பச்சை மிளகாய், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், அதில் மிளகாய் தூளை போட்டு, கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மைசூர் பருப்பு கடைசல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
