Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உருளைக்கிழங்கு பஜ்ஜி
குளிர்காலத்தில் மாலையில் நன்கு சூடாகவோ அல்லது காரமாகவோ ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த உருளைக்கிழங்கு பஜ்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் படித்து அவற்றை மாலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் இந்த பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
கடலை மாவு - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, உப்பு கலந்த நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications