Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!

தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 200 கிராம்
தயிர் - 200 கிராம்
கேரட் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
கறிவேப்பிலை - 7
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு வதக்கவும்.
பின் அதில் தயிர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் ரெடி!!!



Click it and Unblock the Notifications
