For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீல் மேக்கர் கோப்தா!!!

By Maha
|

விடுமுறை நாட்களில் வீட்டில் எபோதும் ஒரே மாதிரி சமைத்துக் கொடுக்காமல், அப்போது சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் வகையில், ஒரு ரெசிபி செய்து கொடுத்து வீட்டில் இருப்போரை அசத்த நினைப்பவர்கள், மீல் மேக்கரை வைத்து, ஒரு கோப்தா கறி செய்து கொடுக்கலாம். இந்த மீல் மேக்கர் கோப்தாவை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது இதை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

Meal maker kofta recipe

தேவையான பொருட்கள்:

கோப்தாவிற்கு:

மீல் மேக்கர் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து பிசைந்தது)

இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கிரேவிக்கு:

வெங்காயம் - 2 (நறுக்கியது)

இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி - 1/2 கப் (அரைத்தது)

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பால் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1/2 கப்

புதினா - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு, 8-10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்து பிசைந்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் மீல் மேக்கரை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அந்த கலவையை சிறு உருண்டைகளாக செய்து, பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

நன்கு கிளறியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் தீயை குறைவில் வைத்து, அதில் மீல் மேக்கரை போட்டு, ஒரு முறை கிளறி, அந்த மீல் மேக்கரில் மசாலா சேரும் படியும், எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரையும் நன்கு கிளறவும்.

பின்னர் அதில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின் அந்த மசாலா சற்று கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி அதில் புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம்.

இப்போது சுவையான மீல் மேக்கர் கோப்தா ரெடி!!!

English summary

meal maker kofta recipe | மீல் மேக்கர் கோப்தா!!!

Soybean kofta is one easy recipe that has a wonderful blend of spices and seasonings. Soybean kofta is made with spices like garam masala (constitutes cardamom, cinnamon, cloves, cumin seeds, peppercorn, star anise, coriander seeds, bay leaves and mace powder). You can make soybean kofta in just 45 minutes! Take a look at the recipe.
Story first published: Saturday, August 11, 2012, 12:15 [IST]
Desktop Bottom Promotion