Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
கேரளா ஸ்டைல் தக்காளி ரசம்
தென்னிந்திய ரசங்களில் தமிழ்நாடு, ஆந்திராவை அடுத்து, கேரளா ஸ்டைல் ரசம் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். அதிலும் கேரளா ஸ்டைல் ரசத்தின் செய்முறை எளிமையாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
இங்கு கேரளா ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப்
வேக வைத்த துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
மல்லி - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளியை வெட்டி, ஒரு வாணலியில் போட்டு லேசாக பிசைந்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
தக்காளியானது நன்கு வெந்தது பச்சை வாசனை முற்றிலும் போனதும், அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 5-7 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து இரண்டு அடுப்பையும் அணைத்து, கொத்தமல்லியைத் தூவினால், கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
