Latest Updates
-
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா?
கடாய் பன்னீர் கிரேவி
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு அந்த கடாய் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரியாதெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு கடாய் பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 2
மல்லி - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications